இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில பல்கலைக் கழக ஆசிரிய சங்க தலைவர் இராசகுமாரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த கால விடுதலை போராட்டத்தில் பல உயர்களை பறி கொடுத்து பல இழப்புக்களை சந்தித்துள்ளோம். இறுதிப் பேரின்போது உச்சக்கட்டமாக மனித உரிமை மீறல் இனப்படுகொலைகள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப்போராட்டம் ஒடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில்; ஈழத்தமிளர்களுக்கு என ஒரு அங்கிகாரம் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அது நடைபெறவில்லை இருப்பினும் சர்வதேச நாடுகள், எமது புலம்பெயர் உறவுகளின் அழுத்தத்தால் உண்மையான அக்கiறாயால் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். என்பதற்கு ஐக்கிய நாடு சபையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் நடவடிக்கைகள் பற்றி விசாரணை மேற்கொண்டு அதற்கு ஒரு தீர்ப்பு வழங்க வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
விசாரணை மிக கஸ்டமான நிலையில் இடம்பெற்றது. சாட்சியமளித்தவர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இருந்தார்கள் இப்பொழுதும் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த விசாரணை முடித்து எதிர் வரும் மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
விசாரணை முடிவின் மூலம் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குற்றங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டு அதற்கு நீதி கிடைக்கும் என்பதை எமது மக்கள், புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் என பலரும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அநீதிக்கு நீதி காணப்பட வேண்டும். அதற்கு முக்கியமானதாக போற்குற்ற விசாரணை அறிக்கை பலராலும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை தாமதப்படுத்துவதற்காக பலர் முயர்ச்சிக்கின்றார்கள் என்பதை இன்று நாம் அறிகின்றோம். அதன்படி தாமதிக்கப்பட்டால் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும் என்பது போல தமிழ் மக்களுக்கு நீதி என்பது கிடைக்காமல் போய்விடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
எனவே அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பது எமக்கு தெரியாது ஆனால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதை அறிய ஆவலாக உள்ளோம். தீர்வை எதிர்பார்த்pருக்கின்றோம். இந்த அறிக்கை கட்டாயமாக மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே சமர்ப்பிக்கப்படவேண்டும் என சர்வதேச நாடுகளான அமெரிக்கா,பிரித்தானியா, இந்தியா , கனடா போன்ற நாடுகளை கோருவதாகவும் அவர் கூறினார்.
நடத்தவுள்ள இப் பேரணி ஊடாக இந் விசாரணை அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஏனைய வெளிநாட்டு தூதரகங்களுக்கும் மகஜர் ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பேரணியில் ஈழத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரின் ஆதரவையும் பல்கலைக்கழக சமூகம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வடமாகாணத்தில் உள்ள சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் வருகின்ற 19 ஆம் திகதி காலை 11 மணிக்கு யாழ் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். இதில் அனைத்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Social Buttons