எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் அதிகாரம் எம்மிடம் காணப்படுகின்றது. எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கைப்பற்ற எமக்கு முடியும்.
நாடாளுமன்றில் கையொப்பங்களை திரட்டி எங்களுக்கு தேவையான ஒருவரை பிரதமராக முடியும். எங்களுக்கு தேவையானவர்களை அமைச்சர்களை நியமிக்க முடியும்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கௌரவமளிக்கும் நோக்கில் நூறு நாள் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.
130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இன்று கண்ணீர் வடிக்கின்றனர் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தங்காலை ரன்ன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment