Latest News

February 15, 2015

விஜயகலாவுக்கு கொலை அச்சுறுத்தல்
by admin - 0

தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மைத்திரி அரசின் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி  விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு  கொண்ட சிலர் தன்னை அச்சுறுத்தினர் எனத் தெரிவித்து இன்று அதிகாலை முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலிருந்து ஈபிடிபியை வெளியேற்றும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக விஜயகலா அறிவித்துள்ளமை அடுத்து இந்த தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments