ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரனுமான துவாரகேஸ்வரன் பல கோடி ரூபாய் மோசடி சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடனாக பெற்றுக் கொண்ட பணத்தை செலுத்த தவறினார் என்கிற வழக்கில் ஆஜராக வேண்டும் என்று இவருக்கு நீதிமன்ற கட்டளை அனுப்பப்பட்டு இருந்தது. இவர் நீதிமன்ற கட்டளையை கிழித்து எறிந்தார். இதனால் நீதிமன்றத்தை அவமதித்த காரணத்தால் யாழ். நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments
Post a Comment