கொஸ்லந்தை மீரியபெத்தை மண் சரிவில் பாதிக்கப்பட்டு மாக்கந்த தேயிலத் தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் ஒருவர் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பில் நேற்று புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
கணபதி இரவீந்தர குமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ள அதேவேளை இலங்கை மனித உரிமைகள் அணைக்குழுவில் 681/15 எனும் இலக்கத்தின் கீழ் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
இதேவேளை, பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரியொருவரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தாக்குதல் விடயத்தை வெளியில் கூற வேண்டாம் என்றும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தாக்குதலுக்குள்ளான நபர் தெரிவிக்கின்றார்.
இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொஸ்லந்தை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கொஸ்லந்தை - – மீரியபெத்தை மண் சரி வில் பாதிக்கப்பட்ட கணபதி இரவீந்திரகுமார் தற்போது மார்கந்த தேயிலைத் தொழிற்சாலையில் தனது குடும்பத்தினரு டன் தங்கியுள்ளார். இவரது சகோதரியும் தாயாரும் மண்சரிவில் புதையுண்டார்கள்.
மாக்கந்தை தேயிலைத் தொழற்சாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படை த் தரப்பினர் அங்கு தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததன் காரணத்தினால் முரண்பட்டமையே இரவிந்தர குமார் மீதான தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனை மையமாக வைத்தே கடந்த 9 ஆம் திகதி இரவு வேளையில் இராணுவச் சிப்பாய்கள் சிலரால் கடுமையாக தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இது தொடர்பில் கொஸ்லந்தை பொலிஸ் நிலையத்தில் கடந்த 11 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தனது மனைவியுடனும் 5வயது நிரம்பிய மகளுடனும் மாக்கந்த தொழிற்சாலையில் தொடர்ந்தும் தங்கியிருப்பது அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் இரவீந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பதுளை மாவ ட்ட அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள், பாதுகாப்பு அமைச்சர் சம்பந்தப்ப ட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கோரப்படுகிறது.
Social Buttons