Latest News

February 14, 2015

மகிந்தவுடன் தற்போதைய அரசில் சிலர் தொடர்பு-துமிந்தவை கைது செய்யவேண்டாம்
by admin - 0

குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்ய வேண்டாம் என புதிய அரசாங்கத்தின் 'மேலிடத்தில்' இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல போதை பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் வாக்குமூலத்தின்படி துமிந்த சில்வாவை கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்ய இரகசிய பொலிஸார் தயாராகி வருகின்றனர்.

எனினும் துமிந்தவை கைது செய்ய வேண்டாம் என மேலிடத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வந்துள்ளது. அதனால் விசாரணையின் போது துமிந்த சில்வாவிற்கு அதிக வசதிகளை வழங்க இரகசிய பொலிஸாருக்கு நேர்ந்துள்ளது.

புதிய அரசாங்கத்தில் உள்ள சிலர் ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு செயற்படும் நிலையில் மஹிந்தவுக்கு உதவியவர்களை இவர்கள் பாதுகாப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக 'லங்கா நியூஸ் வெப்' இணையத்திற்கு தெரியவந்துள்ளது.

இந்நிலை தொடருமானால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை தராத்திரம் பாராது வெளியிட நாம் பின்னிற்கப் போவதில்லை. என்று லங்கா நியூஸ் வெப் இணையம் தெரிவிக்கிறது .

« PREV
NEXT »

No comments