உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
11வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸ்லாந்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் படேல் தலைமையிலான குழுவினர் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர். அணித் தலைவர் டோனி உள்ளிட்ட 8 துடுப்பாட்ட வீர்களும், 7 பந்துவீச்சாளர்கள் கொண்டதாக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள்: டோனி (அணித்தலைவர்), கோலி, ரவீந்திர ஜடேஜா, சுரெஷ் ரெய்னா, புவனேஸ்வர்குமார், இசாந்த் சர்மா, திகர் தவான், ரோகித் சர்மா, அக் ஷர் படேல், ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், உமேஷ் யாதவ், அம்பாதி ராயுடு, முகமது சமி, ரஹானே.
ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் 30 பேர் கொண்ட உத்தேச பட்டியலில் இல்லாத யுவராஜ் சிங் அணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதேவேளை உத்தேச அணியில் இடம் பிடித்திருந்த உத்தப்பாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
Social Buttons