Latest News

January 02, 2015

தமிழரை அழித்தது நாங்கள்தான், கொத்து குண்டு போடப்பட்டது என்பதை ஒத்துகொண்ட இலங்கை அமைச்சர்
by admin - 0

தமிழரை அளித்தது நாங்கள்தான், கொத்து குண்டு போடப்பட்டது   என்பதை ஒத்துகொண்ட இலங்கை அமைச்சர்  இதையே போர்குற்ற ஆதாரமாக எடுத்துகொள்ளலாம்

இன்று யாழில்நடைபெற்ற மகிந்தவின் பிரச்சார கூட்டத்தில் பேசியவர்கள்  இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகித்திருந்தார்.

அதேபோன்று சந்திரிக்கா யுத்த வெற்றின் 70வீதம் தன்னை சாரும் என கூறுகின்றார். இவர்களுக்கு மேலதிகமாக சரத் பொன்சேகா, பாதுகாப்பாக யுத்தத்தை தாம் நடத்தியதாக கூறுகின்றார்.

அப்படியானால் மைத்திரிபால சிறிசேனாவும், சந்திரிக்காவும் யுத்தத்தில் தமிழ் மக்கள் உயிரிழப்புக்களுக்கு, பொறுப்பேற்பார்களா?
ஆகவே மக்கள் இழப்பை ஒத்துகொள்கிறார்கள்

சரத் பொன்சேகா உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்பாரா? என்றெல்லாம்  கேள்வி எழுப்பி பேசினார்கள் .

தொடர்ந்து பேசிய அமைச்சர் டக்ளஸ்,

அதே விடயத்தை கூறி அவர்கள் மக்கள் உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்பார்களா? என கேள்வி எழுப்பி பேசினார்.

ஆக மொத்தத்தில் மக்கள் போரில் அதிகளவில், கொல்லப்பட்டார்கள் என்பதை அந்தக் கொலைகளை இந்த மஹிந்த தலைமையிலான ஆட்சியாளர்கள் மற்றும் படையினர் செய்தார்கள் என்பதனை இன்று அந்த ஆட்சியில் அங்கத்துவம் பெற்றிருப்பவர்களே வாய்விட்டுக் கூறியிருக்கின்றார்கள்.மகிந்த தலைமையில் தமிழர்கள் உலக நியதிக்கு மாற்றாக கொத்து குண்டுகள் போட்டு கொல்லப்பட்டார்கள்

இவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி பேசிக் கொண்டிருக்கையில் மஹிந்த, மேடையில் அமைதியாக அமர்ந்திருந்து  இருந்தார்.

மைதிரிக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொல்கிறார்கள் கூட்டமைப்பு  மகிந்தவுக்கு வாக்களியுங்கள் என்று டக்கிளஸ் சொல்லுகிறார் அப்படி என்றால்  கூட்டமைப்புக்கும் டக்கிளஸ் EPDP க்கும் என்ன வித்தியாசம் ஒருமுறை நாங்கள் சிந்திப்போம் சிங்கள வெறியர்களையும், தமிழ் இன விரோதிகளையும் ஒரு சந்தர்ப்பத்தில் இனம்  கண்டுகொள்ளலாம் அதற்கான வாய்ப்பு இத்தேர்தல் மக்கள் தங்கள் முடிவுக்கு வாக்களிக்க விடுங்கள் அவர்கள் தெரிவு எப்படி என்று தெரியும் உண்மையில் அவர்கள் தெரிவு என்ன என்பதை அதாவது தமிழர் தெரிவு என்ன என்பதை தை 8 தீர்மானிக்கும் 

« PREV
NEXT »