100 நாள் வேலைத்திட்டத்தினை தொடர்ந்து இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு நாட்டின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வலுப்படுத்த வேண்டும் எனும் நிலைப்பாடு தொடர்பில் இரு கட்சிகளின் பிரமுகர்களும் ஆராய்ந்து வருவதாக தகவல் அறிய முடிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் காணப்பட்ட இணக்கப்பாட்டையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பேணுவது தொடர்பில் இரு தரப்பும் ஆராய்ந்து வருவதை ஜனாதிபதி மைத்ரி வரவேற்றிருப்பதாகவும் அதை அவர் விரும்புவதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை இரு கட்சிகளும் ஒரே பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment