Latest News

January 15, 2015

இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்கும்!- பிரித்தானிய நம்பிக்கை
by Unknown - 0

சர்வதேச பங்காளிகள் சகிதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பேச்சாளர் வலெஸ் ஒப் சல்டைரி வெளியிட்டார்.

பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று இலங்கை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின்போது இந்த கருத்து வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை பிரபுää இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை பிரகடனம் தொடர்பில் கேட்ட கேள்வி ஒன்றின்போதே பேச்சாளர் இந்த பதிலை வெளியிட்டார்.

பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியுடன் உறவைக் கொண்டுள்ளவரான ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அந்த நாட்டுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா ஏற்கனவே நல்லெண்ண செய்திகளை அனுப்பியுள்ளதாக சல்டைரி தெரிவித்தார்.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை பெற்றுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய விழுமியங்களை பாதுகாப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சல்டைரி இதற்கு தாம் உடனடியாக பதில்கூற முடியாது என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »