யுரேசியா ரிவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு இணைத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் தற்போது பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் குழு தற்போது கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சவால் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கிறது.
எவ்வாறாயினும், இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தாலும், இறுதி நேரத்தில் அவரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி உருவாக்கப்படுமாக இருந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மாறாக தேர்தலை புறக்கணித்திருந்தால், எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒதுக்கப்பட்ட கட்சியாகவே காணப்படும்.
இதனால் தமிழ் மக்களின் பிரச்சினை எந்தவகையிலும் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்று அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments
Post a Comment