Latest News

January 05, 2015

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணநிதி சேகரிப்பு
by Unknown - 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 1ம் திகதி முதல் தாயகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணநிதி சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளையோர்களால் தமிழர்கள் ஒன்றுகூடும் இடங்கள், கோயில்கள், கடைகள் என பல இடங்களில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. Wembley, Alperton, South harrow, South hall, Ealing, Kingsbury ஆகிய இடங்களில் நிதி சேகரிப்பு நடைபெற்றது.




நீங்கள் இடுகின்றன ஒவ்வொரு பணமும் தாயகத்தில் கஸ்ரப்படுகின்ற எம் சொந்தங்களுக்கு பயனுள்ளதாக அமையும். தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குமாறு தாழ்மையாக யாவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
நன்றி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானியா
« PREV
NEXT »