Latest News

January 13, 2015

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சுப்பதவி இல்லை-அமெரிக்காவின் அழுத்தம்
by admin - 0

அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவையின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சராக அமைச்சரவை அந்தஸ்து அல்லாத ருவான் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

இருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்த சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புச் செயலர் அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

ஆனாலும் வழங்கப்பட்டிருந்த அமைச்சரவையில் சரத் பொன்சேகாவிற்கு எந்தவொரு அமைச்சும் வழங்கப்படாமையின் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தங்களே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments