அலரி மாளிகைக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 800 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அலரி மாளிகையை சுற்றி இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதிப்பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அலரி மாளிகையைச் சுற்றி விசேட பொலிஸ் பிரிகேட்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று மாலை தெரிவித்துள்ளார். வன்முறைகள் இடம்பெறும் என ஊகம் வெளியிடப்பட்ட போதிலும் 2005 மற்றும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களை விடவும் இம்முறை வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்றது.
அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினர் உதவியும் தேவைப்படின் பெற்றுக் கொள்ளப்படும். இராணுவத்தினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையைச் சுற்றி திடீரென ஏன் இவ்வளவு பொலிஸார் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என்பது பற்றிய தகவல்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிடவில்லை.
Social Buttons