பெரும்பாலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபாலவின் பக்கம் சேர்ந்து வரும் நிலையில் கட்சி மேலும் பிளவுறுவதைத் தடுக்கும் நோக்கில் கட்சியை மைத்ரியிடமே ஒப்படைப்பதற்கு மஹிந்த தரப்பு முயற்சிசெய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களான நிமல் சிறிபாலடிசில்வா, சுசில் பிறேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனவிரத்ன ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜனாதிபதி மைத்ரியும் – மஹிந்த ராஜபக்சவும் நாளை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தேர்தலுக்கு முன் மஹிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பெரும்பாலானோர் ஆகக்குறைந்தது மைத்ரியின் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி தமது நிலைப்பாட்iடை மாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தவை மற்றும் இலங்கை தற்போதைய அரசில் உள்ள போர்குற்றவாளிக்கு காப்பற்றும் முயட்சியாக இது பார்க்கப்படுகிறது ஆதாவது தமிழன் ஏமாற்றப்படுகிறான் சிங்களவன் ஏமாற்றுகிறான் இதில் வென்றவன் யார்?
No comments
Post a Comment