Latest News

January 09, 2015

லண்டனில் தமிழர்கள் ஜாக்கிரதை: சில இடத்தில் துப்பாக்கிச் சூடு நடக்கலாம்: MI 5 எச்சரிக்கை !
by admin - 0

லண்டனில் மக்கள் அதிகம் கூடும் இடம், தொடரூந்து, இல்லையென்றால் ஷாப்பிங் சென்ரர்களில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்று தாம் அறிந்துள்ளதாக உளவுத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்க்காக பயிற்சிபெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள், சிலர் லண்டனுக்குள் ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் கைகளில் தானியங்கி துப்பாக்கியும் உள்ளது என்ற ரகசியத் தகவலை MI 5 பெற்றுள்ளது. இதனை அடுத்தே கடும் எச்சரிக்கையை அவர்கள் விடுத்துள்ளார்கள். நாட்டில் அதி கூடிய பாதுகாப்பை அவர்கள் அதிகரித்துள்ளதோடு, ரகசிய பொலிசாரின் நடமாட்டத்தை பன்மடங்காகவும் அதிகரித்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது.

பிரான்சில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் போல, லண்டனிலும் நடக்கலாம் என்று, பிரித்தானியப் பொலிசார் அஞ்சுகிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகள் பக்கம் இருக்கும் பிரித்தானிய உளவாளிகளே இத்தகவலை பிரித்தானியாவுக்கு தெரிவித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. எனவே மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு தமிழர்கள் செல்லும்போது அங்கே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. மேலும் இவ்வாறு நடந்தால் என்னசெய்வது ? நிலைமையை எவ்வாறு சமாளிப்பது மற்றும் அங்கிருந்து எப்படி தப்புவது என்பது குறித்து தெரிந்து வைத்திருத்தல் அவசியம். அத்தோடு அவதானமாக இருக்கவும் வேண்டும்.
குறித்த தீவிரவாதிகளை பிரித்தானியப் பொலிசார் அப்படியே விட்டுவிடப்போவது இல்லை. விரைவில் கைதுசெய்து விடுவார்கள். அதுவரை பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. 
« PREV
NEXT »