புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டவேளையினில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுமுள்ளது.
புதைகுழி தோண்டப்பட்ட இடத்தில் முன்னர் கிணறு ஒன்று இருந்ததாகவும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் எனவே அதனையும் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிய பொதுமக்களின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று முன்னர் மன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வன்னி மாவட்ட காவல்துறை அத்தியட்சகருக்கு மன்று உத்தரவிட்டிருந்தது. எனினும் குறித்த இடத்தில் கிணறு இருந்தமைக்கான அடையாளம் எதுவும் இல்லை என்று மன்றில் தெரிவித்திருந்ததுடன் அறிக்கையினையும் காவல்துறை சமர்ப்பித்திருந்தது
இருப்பினும் ஏற்கனவே பொதுமக்களின் கையொப்பம் இடப்பட்டு மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கையொப்பம் இட்ட பொதுமக்கள் காவல்துறையுடன் சென்று கிணறு இருந்த இடத்தை அடையாளப்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கிணறு இருந்த இடத்தை அடையாளப்படுத்திய பின்னர் அது தொடர்பிலான முழு அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.மூடப்பட்டுள்ள கிணற்றினுள்ளும் பெருமளவிலான மனித எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment