Latest News

January 02, 2015

நான் பிசாசுதான் ஒத்துக்கொண்டார் மகிந்த .
by admin - 0



தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லது என்ற பழமொழிக்கிணங்க, இந்த தெரிந்த பிசாசான மஹிந்தவுடன் ஒன்றுசேருங்கள்.

 உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள். இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ கூறினார். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 'வட பகுதிக்கு பலவேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன். கல்வித்துறையை மிகவும் சிறப்பாக மேம்படுத்தியுள்ளோம். இந்நாட்டில் அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம் பிடித்தவர் உங்கள் பகுதி மாணவனே. நாம் செய்த கல்வி அபிவிருத்தி தான் இந்நிலைக்கு காரணம். மைத்திரிபால சிறிசேன தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்கள் பணம் செலுத்தி கல்வி பெற வேண்டும் என கூறுகிறார். 

இதன்மூலம் இலவசக் கல்வியை இல்லாமல் செய்ய பார்க்கிறார். இலங்கையிலுள்ள இலவச சுகாதாரம் மற்றும் இலவசக்கல்வியில் கை வைக்க ஒரு போதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் சொல்பவர்கள் நாங்கள் இல்லை. 

நாம் தெளிவாக சொல்கிறோம் மின்சாரம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என்பவற்றோடு கல்வியையும் அபிவிருத்தி செய்து உலகை வெல்லும் பிள்ளைகளை உருவாக்குவதே எமது நோக்கம். உங்களது பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், அதற்கு வராவிட்டால் நாம் என்ன செய்வது. நாம் ஐனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என தெரிந்தும் வடமாகாண சபை தேர்தலை நடத்த ஏற்பாடு செய்தேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண மக்களுக்கு என்ன செய்தார்கள்;. இரணைமடு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கு தடைவிதித்தார்கள். 

ஆனால் உங்களுக்காக அந்நீரை கட்டாயம் பெற்றுத்தருவேன். நான் சிறுவயதிலிருந்தே பல தடவைகள் வடக்குக்கு வந்துள்ளேன். ஆனால் மைத்திரி எத்தனை தடவை வந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு மைத்திரியை தெரியுமோ என எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை நன்றாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது எங்கு சென்றாலும் அபிவிருத்தி வேலைகள் தான் கண்ணுக்கு தெரியும்.
 ஏ - 9 வீதி, புகையிரதம் மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள்.இனவாத அரசு எமக்கு தேவையில்லை. எமக்கு பாசம் தான் தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள். இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன்' என தெரிவித்தார். 
« PREV
NEXT »