CV |
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இக் கொலையைச் செய்து முடித்து அதனை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மீது சாட்டுவதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மகிந்தவுக்கு நெருங்கிய தரப்பால் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக கோட்டபாயவின் விசுவாசிகளாக உள்ள சில இராணுவ அதிகாரிகளிடம் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகளில் சிலர் முன்னைய அரசாங்கத்தரப்புடனும் இராணுவத்துடனும் நெருங்கிச் செயற்பட்டு வந்துள்ளனர், இவர்களில் சிலரைக் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மகிந்ததரப்பு முயன்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே இத் திட்டம் தீட்டப்பட்டதாகவும், தான் தோற்கடிக்கப்பட்டால் கொலை செய்யப்பட வேண்டிய முக்கிய நபர்களில் முதலாவது இடத்தில் விக்னேஸ்வரனை சுட்டிக்காட்டியதாகவும் மகிந்த தரப்புடன் நெருக்கமாக இருந்தவர்களால் செய்தி கசிந்துள்ளது.
விக்னேஸ்வரனைக் கொலை செய்து தமிழினத்துரோகி எனக் கூறி, அவரை தாமே சுட்டதாக விடுதலைப்புலிகளின் புதிய பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது என அறிக்கை வெளியிட வைத்து மகிந்த தலைமையில் ஒரு போலி விடுதலைப் புலிகளின் அணியை இயக்குவதற்கு மகிந்த திட்டமிட்டிருந்துள்ளார். இத் திட்டமிடலில் ஈடுபட்டு அதற்கானவர்களை நியமித்த போதும் அவர்களில் சிலர் தற்போது மகிந்தவை விட்டுப் பிரிந்து இத் திட்டத்தை தற்போதய அரசதரப்பின் முக்கியஸ்தர் ஒருவரிடம் தெரிவி்த்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதே வேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சில நடவடிக்கைகள் முன்னாள் போராளிகளையும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உள்ள புலம்பெயர் தமிழர்களின் சில தரப்பையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அமைச்சுப் பதவிகள் பெறவுள்ளதாக கூட்டமைப்பின் சில தரப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ்அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, இராணுவ முகாம்களை அகற்றி மீள்குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமல், எந்த ஒரு அமைச்சுப் பதவியையும் கூட்டமைப்பு பெறக்கூடாது என்பதில் புலம்பெயர் தமிழர்களும் வடக்கு கிழக்கு வாழ்கின்ற பெருமளவு தமிழர்களும் உறுதியாக உள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி, இவற்றை அறிந்து வடக்கு கிழக்கில் தமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவா்களை அச்சுறுத்துவதற்காகவும், விடுதலைப்புலிகள் மீளவும் தோன்றிவிட்டார்கள் என்பதைத் தென்பகுதிக்கு தெரிவிப்பதற்காகவும் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை ஏற்படுத்தி விக்னேஸ்வரன் உட்பட சில தமிழ்த்தரப்பு அரசியல்வாதிகளையும் சிங்களத்தரப்பு முக்கியஸ்தா்களையும் கொலை செய்ய ஆயத்தமாவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Social Buttons