Latest News

January 16, 2015

மஹிந்த – கோத்தாவின் பாதுகாப்புக்கு மைத்ரி உத்தரவாதம்
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்ரி இருவருக்கும் தகுந்த முறையிலான பாதுகாப்பை வழங்க இணங்கியுள்ளதாக அறியமுடிகிறத.

சாமல் ராஜபக்ச – மைத்ரியிடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பிறிதொரு தகவல் மூலம் தெரிவிக்கிறது.

எனினும், இவர்கள் இருவருக்கும் எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என தெரிவிக்கும் அரச தரப்பு, மஹிந்த ராஜபக்ச ஆட்சியமைந்த போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பழிவாங்கப்பட்டது போன்று இவ்வரசாங்கம் செயற்படாது என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments