Latest News

January 26, 2015

மகிந்த அரசு தப்பவிட்ட புலிகளை கைது செய்வேன் -சரத் பொன்சேகா
by admin - 0

விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.   

வடக்கில் யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.     மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். 

இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது.    நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும்.   வடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை. 

ஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.      தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.     

சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.   

இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசு இதை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் புலிகள் கைது தொடரும் என்பதை உறுதிப்படுத்தினார் சரத் பொன்சேகா
« PREV
NEXT »

No comments