Latest News

January 01, 2015

ஐ.சி.சி தரவரிசை பட்டியல்: விராட் கோஹ்லி முன்னேற்றம்!
by Unknown - 0

ஐ.சி.சி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி 169 மற்றும் 54 ஓட்டங்களை எடுத்ததால் 737 தரநிலைப்புள்ளிகளுடன் 19-வது இடத்திலிருந்து 15-வது இடத்திற்குத் முன்னேறியுள்ளார்.

புஜாரா 19-வது இடத்திலும் வேறு ஒரு தளத்திற்கு முன்னேறிய முரளி விஜய் 20-வது இடத்திலும் உள்ளனர்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 147 மற்றும் 48 ஓட்டங்களை எடுத்த அஜிங்கிய ரஹானே, 15 இடங்கள் முன்னேறி 26-வது இடத்திற்கு முன்னேறினார்.

இதேவேளை அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதன் முறையாக துடுப்பாட்ட தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறினார். தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்யர்ஸ் மற்றும் சங்கக்காரா ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், மொகமது ஷமி ஆகியோர் 8 இடங்கள் முன்னேறி, முறையே 36, மற்றும் 38வது இடங்களில் உள்ளனர். முதலிடம் தொடர்ந்து டேல் ஸ்டெய்னுக்கே.

அவுஸ்திரேலியாவின் ரயான் ஹேரிஸ் 2 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தில் உள்ளார். நியூசி. அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 7-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் சகலதுறைவீரர் தரவரிசையில் மாற்றங்கள் இல்லை. வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்திலும், வெர்னன் பிலாண்டர் 2ஆம் இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
« PREV
NEXT »