நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த நிவாணர உண்டியல் முனைப்பு தமிழர்கள் கூடுகின்ற பகுதிகளெங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக 2009ம் ஆண்டு தமது சொந்த நிலங்களில் இருந்து முழுதாக பெயர்த்தெறியப்பட்ட மக்களே, கடந்த சில வாரங்களாக பெய்த கடும் மழைக்குள் அகப்பட்டு பெரும்துயரைச் சந்தித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 31,536 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10,896 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9,715 பேரும், மன்னார் மாவட்டத்தில் 6,495 பேரும், மொத்தமாக 58,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாயகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சு இந்த நிவாரண உண்டியல் முனைப்பினை லண்டனில் மேற்கொண்டுள்ளது.
மனமுவர்ந்து உண்டியலில் இடுகின்ற ஒவ்வொரு சிறுதுளியும் தாயக மக்களின் கண்ணீர்துளிகளை துடைக்கும் என தெரிவித்துள்ள தாயக அபிவிருத்தி அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் நம் அனைவரதும் முதற்கொடையாக இது அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment