வடக்கு, கிழக்கில் மாகாணங்களில் சுதந்திரம் மற்றும் அமைதியான சூழலை ஏற்படுத்த ஆயுதம் தாங்கிய குழுக்களின் ஆயுதங்களை களையுமாறு கடந்த ஆட்சி காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி தமிழ் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் நிராஜ் டேவிட் மற்றும் ராமசாமி துரைரத்தினம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களில் செயற்படும் ஆயுத குழுக்களின் ஆயுதங்களை களைவதன் மூலம் அந்த பிரதேசங்களில் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படும் சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
No comments
Post a Comment