GOOGLE APPS |
எழுத்துக்களையும் பேச்சுகளையும் உடனுக்குடன் மொழிபெயர்க்கக்கூடியதாக புதிய மொழிபெயர்ப்பு எப்ஸ் பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூகுளின் இந்த மொழிபெயர்ப்பு எப்ஸை அன்ட்ரோயிட் மற்றும் அப்பிள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். பிரெஞ்சு, ஜேர்மனிய இத்தாலிய, போர்த்துகேய, ரஷ்ய, ஸ்பானிய மொழிகளில் எழுதப்பட்டுள்ள விடயங்களை ஆங்கில மொழிக்கு இந்த அப்ஸ் மூலம் மொழிபெயர்க்க முடியும்.
இலத்திரனியில் மொழிபெயர்ப்புத் துறையில் மற்றொரு மைல்கல்லாக இது கருதப்படுகிறது.
வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்; பிறமொழிகளில் எழுதப்பட்டுள்ள அறிவித்தல்கள், சமிக்ஞைகள் போன்றவற்றை புரிந்துகொள்வற்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொலிஸார் போன்ற பல்வேறு தொழிற்துறையினருக்கும் இந்த எப்ஸ் மிக பலனுள்ளதாக இருக்கும் என உலகின் மிகப் பெரிய இணையத்தள நிறுவனமான கூகுள் தெரிவிக்கிறது.
"ஸ்மார்ட்போனிலுள்ள கெமரா மூலம் எழுத்துக்களை மொழிபெயர்க்கக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இத்தாலியிலுள்ள வீதிச்சமிக்ஞையையோ அல்லது ஸ்பெய்னின் பார்ஸினோ நகர உணவு விடுதியின் மெனுவையோ இலகுவாக புரிந்துகொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேர்ல்ட் லென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் குவெஸ்ட் விஷுவல் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்த தொழில்நுட்பத்துக்கான உரிமையை கூகுள் நிறுவனம் தன் வசப்படுத்தியது.
Social Buttons