இரண்டு குழந்தைகளின் தாயொருவரின் உடம்புக்குள் பேய் புகுந்துள்ளதாகக் கூறி அந்த பேயை விரட்டுவதற்காக மூன்று பானைகளில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் தேங்காய்ப்பாலை அந்த தாயின் தலையில் கொட்டிய பேயோட்டி ஒருவர் உட்பட மூவரை, பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று வேயங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கொதிக்கும் தேங்காய்ப்பால் ஊற்றியதால் காயங்களுக்கு உள்ளான தாய், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர். இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான பேயோட்டியும் அவருக்கு ஒத்துடைப்பு வழங்கிய 60 வயதான பெண்ணொருவரும் 38 வயதான ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
Social Buttons