Latest News

January 03, 2015

EPDP சந்திரிக்கா பக்கம் சாயுமா டக்ளஸ் கோத்தாவின் கண்காணிப்பில்
by admin - 0

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் குறித்து, சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. 

அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற போதும், அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடனும் தொடர்புகளை பேணி வருவதாகக் கூறப்படுகிறது. 

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி அமையும் பட்சத்தில், தாம் அதனுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக டக்ளஸ் சந்திரிக்காவிடம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு என்ன செய்யபோகின்றது என்பதே தற்போதைய கேள்வி அமைச்சு பதவிக்கு போட்டியின் போது கூட்டமைப்பு டக்ளஸ் மோதல் ஆரம்பிக்கலாம் 

இந்த நிலையில் அவர் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவைக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ கண்காணித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
« PREV
NEXT »

No comments