Latest News

January 08, 2015

அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் திடீரென நுழைந்த தே.ஆணையாளர்
by admin - 0

 கண்டி மாவட்டத்தின் பகதும்பர, ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.     

இதேவேளை அரச ஊடக நிறுவனம் ஒன்றினுள் திடீரென நுழைந்த தேர்தல் ஆணையாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிறேமதாச அரசுடன் இணைந்துள்ளதாக பொய்யான செய்தியை வெளியிட்ட அரச ஊடகம் ஒன்றினை குறித்த செய்தியினை திருத்தம் செய்து மீள ஒளிபரப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.         குறித்த அரச செய்தி நிறுவனம் செய்தியை ஒளிபரப்பியதற்காக மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -
« PREV
NEXT »

No comments