Latest News

January 01, 2015

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்!
by Unknown - 0

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர், 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகமெங்கும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது, மக்கள் வெகு உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

இதேபோன்று சீனாவில் செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபல்யமான சென்யி சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் அமெரிக்க டொலர் போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டுள்ளது.

மக்கள் இதனை எடுப்பதற்காக முந்தி சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »