Latest News

January 09, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம்
by admin - 0

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கைக்கு செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிட்டதை அடுத்து அனுர பிரியதர்ஷன யாப்பா அந்த கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டது கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் வேலைகள் காரணமாக மைத்திரிபால சிறிசேன, கட்சியின் செயலாளராக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்ட ரீதியான உரிமைக்கான நடவடிக்கைகளை எடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

« PREV
NEXT »