Latest News

January 27, 2015

சம்பூரில் காணிகளை சுத்திகரிக்க சென்ற மக்கள் விரட்டியடிப்பு!
by admin - 0

திருகோணமலை – சம்பூர் பகுதியில் தங்களின் சொந்த காணிகளை சுத்திகரிக்க சென்றவர்கள் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த 160க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சம்பூரின் 5ம் மற்றும் 7ம் பிரிவுகளில் உள்ள தங்களின் காணிகளை சுத்திகரிக்க சென்றுள்ளனர்.

எனினும் அவர்களை கடற்படையினர் எச்சரித்து விரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதி மகிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் சீனாவின் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments