இண்டர்நெட் தேடல் பொறி நிறுவனமான கூகுள் இன்க் நிறுவனம் மொபைல் பரிமாற்றங்களுக்கான சிறந்த மென்பொருளை தயாரித்த சாப்ட்கார்டு (Softcard) நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.
கூகுளின் இத்திட்டம், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பே சர்வீஸ் சேவைக்கு போட்டியாக அமையும் என டெக்க்ரஞ்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் இந்நிறுவனத்தை 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க சாப்ட்கார்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தை வாங்குவதன் மூலம் மொபைல் பில்கள் மற்றும் புதிய மொபைல் வாங்குவதில் சலுகை மற்றும் தவணை திட்டம் போன்ற பல ஆதாயங்கள் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சாப்ட்கார்டு நிறுவனம் ஏடி&டி, வெரிசோன் கம்யூனிகேஷன் இன்க், வெரிசோன் வையர்லெஸ் இன்க் மற்றும் டி மொபைல் இன்க் என பல நிறுவனங்களுடன் இணைந்து மொபைல் பேமென்ட் சேவையை அளித்து வருகிறது. தற்போது ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபாபா, இந்தியாவின் மொபைல் பேமென்ட் நிறுவனமான பே-டி.எம் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
Social Buttons