Latest News

January 01, 2015

இணையத்தில் அனல் பறக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" டிரைலர்...
by Unknown - 0


ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் புத்தாண்டு கொண்டாடும் விதத்தில் இரவு 12 மணிக்கு வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

வெளியான 9 மணி நேரத்திற்குள் நான்கு லட்சம் பேர் ட்ரைலரை பார்த்துள்ளனர். மேலும் தல ரசிகர்களின் எதிர்பார்ப்பு ட்விட்டரையும் விட்டு வைக்கவில்லை.
இதே வேளை ,
என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. தியேட்டர்கள் பற்றாக்குறை, பட வேலைகளில் இன்னும் கொஞ்சம் முடியாமலிருப்பது போன்ற காரணங்களால் இந்தப் படம் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போகிறது.

பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய ஐ மற்றும் விஷாலின் ஆம்பள படங்கள் அதிக அரங்குகளில் வெளியாக உள்ளன. இன்றைய தேதி வரை பொங்கல் வெளியீடு என்று கூறப்பட்ட என்னை அறிந்தால், திடீரென போட்டியிலிருந்து இன்று விலகிக் கொண்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறுகையில், "பொங்கலுக்கு படத்தை வெளியிடாத நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் படத்தின் வேலைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. எனவே இரு வாரங்கள் கழித்து ஜனவரி 29-ம் தேதி வெளியிடுகிறோம்," என்றார். அஜீத் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.









« PREV
NEXT »