![]() |
Air Asia |
எயார் ஏசியா வானூர்தி விபத்தில் சிக்கியவர்களின் மேலும் 6 பேரது சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த எயார் ஏசியா வானூர்தி ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த அனர்த்தம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த விபத்தின் போது, வானூர்தியில் பயணித்த 162 பேரும் பலியாகினர்.
இதனை தொடர்ந்து, பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, நேற்றைய தினம் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
![]() |
air asia |
இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இதுவரையிலும் 59 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons