பிரான்ஸில் ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆயுததாரிகளால் பணயக் கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக, பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள களஞ்சிய கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த இரண்டு இஸ்லாமியவாத ஆயுததாரிகளையும் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர், அந்தக் கட்டடத்தை முற்றுகையிட்டிருந்தனர்.
இருள் சூழ்கின்ற நேரத்தில், ஆயுதந்தரித்த தாக்குதல் அணியொன்று குறித்த கட்டடத்துக்குள் நுழைந்ததை அடுத்து, வெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டன.
ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகத்துக்குள் நுழைந்து, சகோதரர்களான சயித் குவாச்சி மற்றும் ஷெரிஃப் குவாச்சி என்ற இந்த ஆயுததாரிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons