Latest News

January 01, 2015

மைதிரி 9ம் திகதி வீதியில் நிற்பார் -எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா
by admin - 0


காத்தான்குடி 6 ஜென்னத் மாவத்தையில் சமூர்தி பயானிகளுக்கான 2500/= ரூபாய் வழங்கும் நிகழ்வு இன்று 01.01.2015 வியாழக்கிழமை) ஜென்னத் பாலா பாடசாலை மண்டபத்தில் முன்னால்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதயாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டு உரையாற்றுகையில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் படு மோசமாக தோல்வியுற்று ஒன்பதாம் திகதி வீதியில் நிற்கப் போகும் மைத்திரிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் உரையினை கேட்டுக் கொண்டிருந்த சுமார் 350 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்சவுக்குதான் எனக்கூறி தங்களின் கைகளை உயர்திக்காட்டியது நிகழ்வின் விசேட அம்சமாகும்.கை மகிந்தவுக்கு காட்டி ஓட்டை மைதிரிக்கு இவர்கள் போடலாம் இது அமைச்சருக்கு தெரியாமல் இருக்குமா
« PREV
NEXT »