Latest News

December 18, 2014

பொதுவேட்பாளருடன் எந்தவித ஒப்பந்தத்தினையும் செய்யவில்லை-சுமந்திரன்
by Unknown - 0

எதிரணி பொது வேட்பாளருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தினையும் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள மஹிந்த ராஜபக்ச நேற்று சிலாபத்திலே இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையே இரகசிய உடன்படிக்கை ஒன்று உள்ளதாக பகிரங்கமாக கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசசபையில் கட்சி உறுப்பினர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வு இன்று காலை ஆலையடிவேம்பு தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு தமிழரசிக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், பா.அரியநேத்திரன், ரெலோ இயக்க செயலாளர் நாயகம் கென்றி மகேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான துரைராஜசிங்கம் த.கலையரசன், இராஜேஸ்வரன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு முடிந்த பிற்பாடு ஊடகவியளாலர்களது கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுமத்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ச சிலாபத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசாரத்தின் போது, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று உள்ளதாகவும் அதனை சுமந்திரனே மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரதங்கள் தன்னிடம் இருப்பதாகவும் நேரம் வரும்போது அதனை பகிரங்கப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றார்.
இது முற்றிலும் முழுக்கமுழுக்க பொய்யான கருத்தாகும். இதுவரைக்கும் நாங்கள்  எவருடனும் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. மாறாக தான் பாமர சிங்கள மக்களிடையே வாக்குகளை பெறுவதற்காக வெறும் பொய்களை பரப்பி வருகின்றார். இவர் உரிய நேரம் வரும்போது அறிவிப்பதாக சொல்லியிருக்கின்றார். நான் அவரிடம் கூறுகின்றேன் அதற்கான உரிய நேரம் இப்போதுதான் ஆகவே அந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணத்தினை இப்போதே தெரியப்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாகவே அந்த வேட்பாளருக்கு சவால் விடுகின்றேன். வெறுமனே பொய் சொல்லி வாக்குத்தேடும் ஒரு ஜனாதிபதியினை இந்நநாடு பெற்றிருப்பதனை இட்டு நாங்கள் மிகவும் மனவேதனை அடைவதாகவும் கூறினார்.



« PREV
NEXT »