யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
இதன்படி புலனாய்பு பிரிவினரால், கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டோ அல்லது ஆசை காட்டியோ, அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க செய்கின்றனர்.
பின்னர் அவர்களுக்கான சலுகைகளை வழங்குவதாகவும், அல்லது அவர்களை கைது செய்து தண்டிக்கவிருப்பதாக அச்சுறுத்தியும் அரசாங்கத்தின் பக்கம் வருமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அம்பாறை – திருகோவில் பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரையும் இழுத்தெடுக்க கடும் பிரயத்தனத்தை மகிந்த தம்பிகள் மேற்கொண்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் சிக்குபவர்கள் அரசியல் அநாதைகள் ஆகிவிடுவார்கள் என்பதாலும் மற்றும் காசுக்கு அடிபணிந்து போகததாலும் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது எமக்கு தகவல் கிடைத்துள்ளது . பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments
Post a Comment