இலங்கை கடற்படைக்காக இரண்டு கப்பல்களை இந்தியா கட்டி வருவதாக இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, இதுவரை மிக அரிதாகத்தான் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. தற்போது முதல் முறையாக போர்க் கப்பல் ஒன்றை வெளிநாடு ஒன்றுக்கு இப்போது ஏற்றுமதி செய்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ரோந்துக் கப்பலை மோரிசியஸ்சுக்கு அளிக்கும் நிகழச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், இரண்டு ரோந்துக் கப்பல்களை இந்தியாவிடம் இருந்து விலைக்கு வாங்க இலங்கை கோரியுள்ளதாகவும், அந்தக் கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுபமதி செய்யப்படும் இக்கப்பல்கள் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், இதற்கு அந்நிய நாடுகளின் ஒப்புதல் ஏதும் தேவையில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
Social Buttons