Latest News

December 31, 2014

ஜனாதிபதித் தேர்தல் சட்ட மற்றும் ஜனநாயக முறைப்படியே இடம்பெறும்-மஹிந்த தேசப்பிரிய
by Unknown - 0

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கான சதிமுயற்சி மற்றும் கள்ள வாக்களித்தல் என்பன இடம்பெறுவதற்கு எந்தவிதத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று உறுதியாக தெரிவித்தார்.
நுணுக்கமானதும் கிரமமானதுமான ஒழுங்கு முறையின் கீழ் வாக்கெடுப்பு முதல் பெறுபேறுகள் வெளிவரும் வரையிலான அனைத்து செயற்பாடுகளும் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் ஒரே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதனால் அங்கு சதி மற்றும் குளறுபடிகளை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இருக்காது எனவும் அவர் கூறினார்.

பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தி முடித்தாலும், கள்ள வாக்களித்தல் உள்ளிட்ட ஏதோவொரு சதிமுயற்சி இடம்பெற்றிருப்பதாக அரசியல் கட்சி களும் மக்களும் சந்தேகங்கள் கொண்டு பார்ப்பதனை தவிர்க்க வேண்டுமெனவும் ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.
« PREV
NEXT »