ஐரோப்பிய நாடுகளும், ஏனைய நாடுகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ருவான்வெலயில் நேற்று இடம்பெற்ற கூட்டம ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,
வடக்கில் உள்ள படையினரில் 50 வீதத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாடு பிரிக்கப்படக்கூடாது என்பதற்காகவே வடக்கில் தொடர்ந்தும் படையினர் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
Social Buttons