Latest News

December 24, 2014

இஸ்லாமிய மயமாகும் ஜேர்மனி - ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்
by Unknown - 0

ஜேர்மனியை இஸ்லாமிய மயமாக்குவதாக குற்றம்சாட்டும் அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் 17,000 பேர் கலந்துகொண்டனர்.
ஜேர்மனியில், வலதுசாரி இயக்கமான "ஐரோப்பிய, அமெரிக்க இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான உண்மை ஐரோப்பியர்கள்" (பெகிடா) என்ற அமைப்பு அந்த நாட்டு குடியேற்றச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.
ஏற்கெனவே, நாஜிக்களின் இனவெறிக் கொள்கைகள் காரணமாக கசப்பான வரலாற்றைக் கொண்டுள்ள ஜேர்மனியில், மீண்டும் இனவாதம் தலைதூக்கக் கூடாதென அந்நாட்டு தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்னர்.
எனினும் எதிர்ப்புகளையும் மீறி, பெகிடா அமைப்புக்கு மிக வேகமாக ஆதரவு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் அந்த அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சில நூறு பேர்களே பங்கேற்ற நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஊர்வலத்தில் சாதனை அளவாக 17,000 பேர் கலந்து கொண்டனர்.
தாங்கள் நாஜிக்கள் அல்ல எனவும், நாட்டில் கிறிஸ்துவக் கலாசாரம் சீரழிக்கப்படுவதை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பெஜிடா அமைப்பின் ஊர்வலத்துக்கு எதிராக 4,500 பேர் பெர்லினில் அதே நாள் ஊர்வலம் சென்றனர்.
யூதப் படுகொலைகளை நடத்திய ஜேர்மனியில், இனியும் இனவெறி, தேசியவெறிக்கு இடமில்லை என எதிர் அமைப்பினர் கூறியுள்ளனர்.






« PREV
NEXT »