Latest News

December 29, 2014

பேரிழப்பில் இருந்து தப்பிய லண்டன் விமானம் !
by Unknown - 0

Virgin VS43 என்னும் விமானம் 447 பயணிகளுடனும் 15 விமான சிர்ப்பந்திகளுடனும் லண்டன் கட்விக் (Gatwick) விமான நிலையத்தில் இருந்து லாஸ் வேகாஸ் (Las Vegas) புறப்பட்டது . இவ் விமானத்தின் பிரதான லேண்டிங் கியரில் ஏற்ப்பட்ட திடீர் கோளறு காரணமாக அவ் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டி ஏற்ப்பட்டது. இவ் அவசர நிலைமை கருதி  கட்விக் (Gatwick) விமான நிலைய ஓடுதளம் தற்க்காலிகமாக மூடப்பட்டது . 

போயிங் 747 எனும் வாகையை சார்ந்த இவ் விமானம் பலமுறை தென் இங்கிலாந்திற்கு மேலே எரிபொருள் முடியும் வரை வட்டமடித்து பின் சடுதியாகவும் கவனமாகவும் 3 சக்கர தொகுதிகளின் உதவியுடன் 16.00 GMT க்கு தரையிறக்கப்பட்டது. இவ் அவசர நிலைமை கருதி மூடப்படிருந்த விமான நிலைய ஓடுதளம் பி ப 19.03 க்கு மீண்டும் திறக்கப்பட்டது .

ஓடுதளம் சில மணி நேரம் மூடப்பட்டிருந்தமையல் வேறு சில விமானங்கள் திசை திருப்பப்பட்டும் சில விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டும் இருந்தன. மீண்டும் ஒர் விமான விபத்து தடுக்கப்பட்டதுடன் பெரியதோர் உயிர் சேதமும் தடுக்கப்பட்டுள்ளது..




« PREV
NEXT »