சியாரா லியோனில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய குறித்த பெண், தற்போது கிளாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.வட லண்டனில் உள்ள எபோலா தாக்கத்திற்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகொண்ட மருத்துவமனை ஒன்றுக்கு விரைவில் அவர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இங்கிலாந்தினை எபோலா தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தோன்றியுள்ள இன் நிலையை, அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்று தெரியவில்லை. இது நாம் நினைப்பதை விட மிக மோசமாக பரவலாம்.எனவே தமிழர்கள் ஜாக்கிரதை. ஒருவிதமான திடீர் காச்சல். மூச்சு விட திணறல், மற்றும் சளி காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுப்பது நல்லது.
No comments
Post a Comment