Latest News

December 24, 2014

சச்சினை பின்னுக்குத் தள்ளி கோஹ்லி புதிய சாதனை!
by Unknown - 0

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லியை டிவிட்டரில் 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 பேர் பின் தொடர்கிறார்கள்.
ஒக்டோர் 2ம் திகதி கோஹ்லி தனது டுவிட்டர் கணக்கை (@imVkohli) தொடங்கினார். இந்த கணக்கை இதுவரை 48,70,190 பேர் பின் தொடர்கிறார்கள்.
இதன்மூலம், விளையாட்டுத் துறையில் இந்திய நட்சத்திர வீரராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரை (48,69,849) பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார் கோஹ்லி.
டிவிட்டர் தளத்தில் இந்திய அணித்தலைவர் டோனி 33,27,033 ரசிகர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். வீரேந்திர ஷேவாக் நான்காவது இடத்திலும், யுவராஜ் சிங் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
விளையாட்டுத் துறையில் முதல் 10 இடங்களில் 9 இடத்தை கிரிக்கெட் வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
« PREV
NEXT »