Latest News

December 29, 2014

என்னை அறிந்தால் படத்தின் இசையும் ட்ரைலரும் ஒன்றாக வெளியாகவிருக்கிறது
by admin - 0

என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியாகும் அன்றே படத்தின் ட்ரைலரும் வெளியாகவிருக்கிறது. அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை - பாடல்கள் நாளை மறுநாள் நள்ளிரவு வெளியாகவிருக்கின்றன. இதற்காக அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அதே நேரத்தில் படத்தின் ட்ரைலரையும் வெளியிடுகிறார்கள். இது அஜீத் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. என்னை அறிந்தால் டீசர் வெளியாகி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இந்திய அளவில் சாதனைப் படைத்துள்ளது. இப்போது ட்ரைலரும் அதே போன்ற சாதனையைப் படைக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.தல ரசிகர்களுக்கு இது பெரும் கொண்டாட்டம்தான் 
« PREV
NEXT »