112 வயதினைக்கடந்து 113 வயதினை நோக்கி உற்சாகத்தோடு காத்திருக்கின்றார் காத்தி எனப்படும் காத்தியப்பு.
எமது மூதாதையரிடம் நச்சுக்கலப்பற்ற உணவுப்பழக்கமும் எந்நேர உழைப்பும் காணப்பட்டதால் இயற்கை அவர்களுக்கு நீடித்த ஆயுளைக் கொடுத்திருந்தது. ஆனால் இன்றோ தொற்றா உயிர்வழி நோய்கள்கூட எமது தலைமுறையை நெருக்கிப்பிடிக்கத் தொடங்குகின்றது.
இன்றும்கூட எமது அப்பு ஆச்சிகள் தமது நிறைந்த வயதிலேயே காலமாகின்றனர், அதேநேரம் அவர்களின் பிள்ளைகளும் அவர்கள்பின்னாலேயே சுடுகாடு செல்கின்றனர், பல்வேறு தொற்றா உயிர்வழி நோய்களால் பலியெடுக்கப்பட்டு..!
இந்த மாநிலத்தையே வென்றவனும் இருக்கிறான் ஆனால் மரணத்தை வென்றவன் யாருமே இல்லை. மரணத்தை யாராலும் வெல்லமுடியாது, ஆனால் அதன் பிடியினைத் தள்ளிப்போட முடியும். அதுவும் மனிதனின் கையிலேயே உள்ளது.
வாழ்ந்துகொண்டிருப்பவனிற்கு வாழ்ந்துகெட்டவனே வழிகாட்டியென்பார்கள். ஆனால் காத்தியப்பு வாழ்ந்துகொண்டே வழிகாட்டுகின்றார். இன்னும் பலகாலம் இதே இறுமாப்போடு வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் சண்டியர் காத்தியப்பு
No comments
Post a Comment