Latest News

November 24, 2014

கூட்டமைப்புக்கும் தூது விட்ட மகிந்த
by admin - 0

அர­சாங்கம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­னரை தம்­முடன் இணைத்­துக்­கொள்­வ­தற்­கான பேரம்­பே­ச­லொன்றை மேற்கொண்­டுள்­ளது.  இதனை கூட்­ட­மைப்பின் மூத்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.
இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் மூத்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை நேற்று இரவு அணு­கிய அர­சாங்­கத்­த­ரப்­பினர் தமது தரப்­புடன் இணைந்தால் அமைச்­சுப்­ப­த­வி­யொன்றை வழங்­கு­வ­தா­கவும், வடக்கு மாகா­ணத்­திற்­கான அபி­வி­ருத்­திக்­கு­ரிய முழு­மை­யான நிதியை வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர். ஆகவே குறித்த விடயம் தொடர்­பாக சிந்­தித்து சிறந்த முடி­வொன்றை எடுக்­கு­மாறும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.
இந்­நி­லையில் குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாம் இத்­தனை வரு­டங்­க­ளாக பத­வி­க­ளுக்­காக போரா­ட­வில்லை எனக்­கு­றிப்பிட்­ட­துடன் சலு­கை­களைப் பெறு­வது எமது நோக்­க­மல்ல எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­துடன் முதலில் அர­சாங்கம் நல்­லெண்ண நோக்­க­மாக வலி.வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்­துள்ள சுமார் 30ஆயிரம் வரை­யி­லான எமது உற­வு­களின் சொந்தக் காணிகளை மீளக்கையளித்து அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப் படுத்தவேண்டும் என வலியுறுத்தி யதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
« PREV
NEXT »