சிறிலங்கா அரசாங்கம் விரைவில் போர்க்குற்ற சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படும் என்று உலக போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பேச்சாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறிலங்காவுக்கு எதிரான விசாரணைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
இது போர்க்குற்ற சட்டத்தின் கீழ் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் ஆரம்பகட்டமாகும்.
இதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும், புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற சிறிலங்காவின் மக்களிடம் இருந்து விசாரணைக் குழு தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments
Post a Comment