Latest News

November 29, 2014

வட மாகாண ஆளுநர் அஸ்வர் ?
by admin - 0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், குறித்த பதவியினை நேற்று நண்பகல் இராஜினாமா செய்தார்.   

இதனையடுத்தே இவரை வட மாகாண ஆளுநராக நியமிப்பதற்கான நடவடிக்கையினை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.     ஜனாதிபதித் தேர்தலில் அஸ்வர், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டியுள்ளமையாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

இருப்பினும் இந்த நியமனம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments